< Back
பெங்களூரு
தோட்டத்தில் வளர்த்த 5½ கிலோ கஞ்சா செடி பறிமுதல்-விவசாயி கைது
பெங்களூரு

தோட்டத்தில் வளர்த்த 5½ கிலோ கஞ்சா செடி பறிமுதல்-விவசாயி கைது

தினத்தந்தி
|
25 Aug 2022 10:49 PM IST

பங்காருபேட்டையில் தோட்டத்தில் வளர்த்த 5½ கிலோ கஞ்சா செடி பறிமுதல் செய்த போலீசார் விவசாயியை கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா ஐனூர் ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணு. விவசாயியான இவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் துவரம் பருப்பு சாகுபடிக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கோலார் மாவட்ட தாசில்தார் தயானந்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார், பங்காருபேட்டை போலீசாருடன் ஐனூர் ஒசஹள்ளி கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அவர், தோட்டத்தில் கஞ்சா செடிகளை ஊடுபயிராக பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேணுவை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5½ கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

மேலும் செய்திகள்