< Back
பெங்களூரு
பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை  தொடர் மழையால் 4,500 குடும்பங்கள் பாதிப்பு-மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
பெங்களூரு

பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தொடர் மழையால் 4,500 குடும்பங்கள் பாதிப்பு-மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி

தினத்தந்தி
|
8 Sept 2022 10:41 PM IST

பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு;

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் கடநத சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மகாதேவபுரா, பெல்லந்தூர், வர்த்தூர், யமலூரு, சர்ஜாபுரா, சன்னசந்திரா, கால நாயக்கனஹள்ளி, மாரத்தஹள்ளி, தொட்டனகுந்தி உள்ளிட்ட பகுதிகள் மழையால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ள. சுமார் 130 அடுக்குமாடி

குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. அங்கு மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் பெய்துவரும் தொடர் மழையால் சுமார் 4,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதிப்பில் சிக்கிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 3 வேளையும் உணவுகள், பிற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் மழை பாதிப்பு ஏற்படுவதற்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டிடங்களே முக்கிய காரணமாகும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

மேலும் செய்திகள்