< Back
பெங்களூரு
போதைப்பொருள் விற்ற  3 பேர் பிடிபட்டனர்
பெங்களூரு

போதைப்பொருள் விற்ற 3 பேர் பிடிபட்டனர்

தினத்தந்தி
|
7 July 2022 8:41 PM IST

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற 3 பேர் பிடிபட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 3 பேரில் 2 பேர் கேரளா, ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் நைஜீரியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆந்திரா, ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், நண்பர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, 62 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அதன்மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். கைதான 3 பேர் மீதும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்