< Back
பெங்களூரு
கொள்ளை வழக்கில்  நேபாள தம்பதி உள்பட 3 பேர் கைது
பெங்களூரு

கொள்ளை வழக்கில் நேபாள தம்பதி உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
7 July 2022 8:47 PM IST

பெங்களூருவில் கொள்ளை வழக்கில் நேபாள தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி கே.வி.ரோட்டில் வசித்து வருபவர் வினோத். தொழில் அதிபரான இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த பிரேம் பகதூர் (வயது 41), அவரது மனைவி சங்கீதா (26) ஆகியோர் வேலை செய்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோத், தனது மனைவி, மகனுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வினோத்தின் தாய் மஞ்சுளாவை பிரேம் பகதூர், சங்கீதா, இவர்களது கூட்டாளி பிஷ்ணு பகதூர் ஆகியோர் சேர்ந்து கை, கால்களை கட்டி போட்டனர்.

பின்னர் வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 100 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்று இருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பிரேம், சங்கீதா, பிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்