< Back
பெங்களூரு
பெங்களூரு
திருட்டு வழக்கில் 2 பேர் சிக்கினர்
|16 Jun 2022 8:36 PM IST
பெங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் சிக்கினர்.
பெங்களூரு:
பெங்களூரு மாகடி ரோடு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காச்சோஹள்ளியை சேர்ந்த வினோத், நெலமங்களாவை சேர்ந்த ஜெகதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும், மாகடி ரோடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த 25-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடி இருந்தார்கள்.
இதையடுத்து, கைதான 2 பேரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான வினோத், ஜெகதீஷ் மீது மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.