< Back
பெங்களூரு
கஞ்சா விற்ற 2 பேர் கைது
பெங்களூரு

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
10 July 2022 8:21 PM IST

பெங்களூருவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் உள்ள பூங்கா முன்பு நின்று கொண்டு 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சதாசிவநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் பூங்கா அருகே ரோந்து சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 180 கிராம், ரூ.800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 2 பேரும் ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்காரில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்