மைசூரு சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
|மைசூரு மத்திய சிறையில் இருந்து 12 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மைசூரு:
நன்னடத்தை கைதிகள்
கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் ஏராளமான ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.அதேபோல், மைசூரு மத்திய சிறையில் உள்ள 12 ஆயுள் தண்டணை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
12 கைதிகள் பெயர் பரிந்துரை
அதன்படி மைசூரு மத்திய சிறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த 12 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.இதையடுத்து ைமசூரு மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் நேற்று நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறை அதிகாரிகள் விடுதலை தொடர்பான சான்றிதழ் வாங்கி அனுப்பி வைத்தனர். முன்னதாக விடுதலையான ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறை அதிகாரி அறிவுரை வழங்கினார். அதாவது, சிறையில் இருந்து வெளியே சென்ற பின்னர், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும் என்றார்.