< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி  வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

Image Courtesy : PTI 

தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

தினத்தந்தி
|
24 Jun 2022 12:19 PM IST

அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 9-ந் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.ஆளும் பா.ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .ஏற்கனவே பா.ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பபு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகள்