< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

தினத்தந்தி
|
27 Aug 2022 7:51 AM IST

சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பதவி ஏற்றவர், என்.வி. ரமணா. நேற்று அவர் ஓய்வு பெற்றார். தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி யு.யு.லலித் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடக்கிற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

மேலும் செய்திகள்