< Back
தேசிய செய்திகள்
வாக்குச்சாவடியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
தேசிய செய்திகள்

வாக்குச்சாவடியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்

தினத்தந்தி
|
13 May 2024 9:57 AM IST

ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அமராவதி,

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலத்தின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. ரெண்டல கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பூத் முகவர்களை ஆளுங்கட்சியினர் தாக்கியுள்ளனர். இதனால் இரு கட்சியை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் 2 பேரின் மண்டை உடைந்தது.

மேலும் இந்த மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சியினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்