< Back
தேசிய செய்திகள்
காங்கிரசுடன் இணைவது எப்போது? - ஒய்.எஸ்.ஷர்மிளா பதில்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காங்கிரசுடன் இணைவது எப்போது? - ஒய்.எஸ்.ஷர்மிளா பதில்

தினத்தந்தி
|
26 Sept 2023 2:17 AM IST

காங்கிரஸ் கட்சியுடன் எப்போது இணைவது என்பது குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா பதில் அளித்தார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் சேரலாம் என்றும், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கலாம் என்றும் தகவலகள் வெளியானது.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 33 மாவட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் ஷர்மிளா மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒய்.எஸ்.ஷர்மிளா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதம் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும். காங்கிரசுடன் இணைந்து செயல்படுவது அல்லது இணைவது குறித்த விவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 2-வது வாரத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்'' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்