< Back
தேசிய செய்திகள்
சோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.சர்மிளா சந்திப்பு..!
தேசிய செய்திகள்

சோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.சர்மிளா சந்திப்பு..!

தினத்தந்தி
|
4 Jan 2024 1:53 PM IST

ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

புதுடெல்லி,

ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் சர்மிளா இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்த பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்