< Back
தேசிய செய்திகள்
கஞ்சா செடிகள் வளர்த்த வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தேசிய செய்திகள்

கஞ்சா செடிகள் வளர்த்த வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
24 Feb 2023 8:42 PM GMT

விளை நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த வழக்கில் விவசாயிக்கு 10 அண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிக்பள்ளாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

கோலார் தங்கவயல்:

விளை நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த வழக்கில் விவசாயிக்கு 10 அண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிக்பள்ளாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

விவசாயி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா ஹூனுகுந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தப்பா(வயது 45). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விளைப்பயிர்களுக்கு இடையில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிந்தாமணி கலால் துறை அதிகாரிகள் ஹூனுகுந்தா கிராமத்திற்கு சென்று சாந்தப்பா விளை நிலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விளைப்பயிர்களுக்கு இடையில் கஞ்சா செடிகள் சாகுபடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சாந்தப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுெதாடர்பான வழக்கு சிக்பள்ளாப்பூர் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கில் கலால்துறையினர் சிக்பள்ளாப்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சாந்தப்பா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நீருபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்