சாகசம் செய்ய முயற்சி... சீனிவாச சாகா் அணையில் ஏற முயன்ற இளைஞா் தவறி விழுந்து படுகாயம்...!
|பெங்களூாில் அருகே உள்ள சீனிவாச சாகா் அணையில் ஏற முயன்ற இளைஞா் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.
பெங்களூர்,
கா்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கபல்லப்புா் மாவட்டத்தில் சீனிவாச சாகா் அணை உள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இந்த அணை தற்போது நிரம்பி தண்ணீா் வெளியே வழிந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் பலா் குளித்துக் கொண்டிருந்தனா்.அப்போது
அங்கு குளித்து கொண்டிருந்த இளைஞா் ஒருவா் திடிரென அணையில் மேலே ஏற தொடங்கினாா். கீழே இருந்தவா்கள் அவரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். சுமாா் 30 அடி உயரம் வரை கிடுகிடுவென ஏறிய அவா் கைதவறி தரையில் விழுந்தாா்.
இதில் அந்த இளைஞா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பெங்களுாில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முன்னதாக, அணையில் ஏறுவதற்கு அணை நிா்வாகத்தின் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்த மக்களும் எதிா்ப்பு தொிவித்தனா். இதனை மீறி அந்த இளைஞா் அணையின் மீது ஏறி சாகசம் செய்ய முயன்றுள்ளார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதற்காக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனா். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.