< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் சரிந்து இளைஞர் உயிரிழப்பு.. அதிர்ச்சி வீடியோ
|3 Jun 2024 5:43 PM IST
பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த அந்த இளைஞர், அடுத்த நொடியே நிலைதடுமாறி சரிந்து விழுந்தார்.
மும்பை,
சமீப காலங்களாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்களும், குறைந்த வயதுடையவர்களும் மாரடைப்பால் உயிரிழப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மும்பையில் உள்ள தானே பகுதியில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. தானே பகுதியில் உள்ள மீரா சாலையில் ஒரு மைதானத்தில் நடந்து கொண்டிரு இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தான் எதிர்கொண்ட பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்து நின்றுகொண்டிருந்த அவர், அடுத்த நொடியே நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக அந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த இளைஞர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.