தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
|தாா்வார் டவுனில் தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி;
தார்வார் டவுனில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதியில் பெலகாவி மாவட்டம் பைலஹொங்கலா தாலுகா பிடதகட்டி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் நிமபால்கர் (வயது 24) என்பவர் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.
இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று தான் தங்கி இருந்த அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இவரது அறை வெகு நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விடுதியின் உரிமையாளர், வித்யாகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர், மாற்று சாவி மூலம் மஞ்சுநாத் தங்கியிருந்த அறையின் கதவை திறந்துள்ளனர். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை பாா்த்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது செல்போனில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் தற்கொலை குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.