திருமண வரன் அமையாததால் வாலிபர் தற்கொலை
|துமகூருவில் திருமண வரன் அமையாததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
துமகூரு:
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா ஜம்பேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிரண்குமார் (வயது 29), கூலி தொழிலாளி. கிரண்குமாருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு பெற்றோரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கிரண்குமார் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் விரைந்து சென்று கிரண்குமாாின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது மதுஅருந்தும் பழக்கம் இருந்த கிரண்குமாருக்கு, திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு திருமண வரன் அமையவில்லை. சமீபத்தில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், அது தடைபட்டது. இதன் காரணமாக மனம் உடைந்த கிரண்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.