< Back
தேசிய செய்திகள்
திருட்டு வழக்கில் வாலிபர் கைது; 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
தேசிய செய்திகள்

திருட்டு வழக்கில் வாலிபர் கைது; 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

தினத்தந்தி
|
1 Aug 2022 8:51 PM IST

சிகாரிப்புராவில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா போலீசார் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அனுமந்தநகர் பகுதியை சேர்ந்த ராஜப்பா (வயது 35) என்பதும், அவர் சாலையோரம் மற்றும் வீடுகள் முன்பு நிற்கும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டு திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 9 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2.65 லட்சம் ஆகும். இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்