மாடுடன் தகாத உறவு கொண்ட வாலிபர் கைது
|மாடுடன் தகாத உறவு கொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கசபலிங்கசுகுர் கிராமத்தை சேர்ந்தவர் அமரேஷ். விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அமரேஷ் தான் வளர்த்து வரும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது ஒரு மாட்டை கயிறை பிடித்து இழுத்து சென்று மரத்தில் வாலிபர் ஒருவர் கட்டி போட்டார்.
பின்னர் மாடுடன் அந்த வாலிபர் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த அமரேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தனது உறவினர்கள் உதவியுடன் அமரேஷ் அந்த வாலிபரை மடக்கி பிடித்து லிங்கசுகுர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் இம்தியாஸ் (வயது 27) என்பதும், அவர் மாடுடன் தகாத உறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் இம்தியாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது லிங்கசுகுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.