< Back
தேசிய செய்திகள்
உங்கள் ஆற்றல் தொற்றுநோய் போல ஒட்டிக்கொள்ளும் - வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்
தேசிய செய்திகள்

உங்கள் ஆற்றல் தொற்றுநோய் போல ஒட்டிக்கொள்ளும் - வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

தினத்தந்தி
|
12 Aug 2022 12:46 AM IST

துணை ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி ஒரு பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.

3 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த கடிதத்தில் வெங்கையா நாயுடுவின் ஆற்றலை அவர் போற்றிப்புகழ்ந்துள்ளார்.

"உங்கள் ஆற்றல் தொற்றுநோய் போல ஒட்டிக்கொள்ளும். அதை உங்கள் புத்திசாலித்தனத்திலும், ஞானத்திலும் காண முடியும். உங்களது ஒற்றை வரிகள் பரந்த அளவில் போற்றப்படுகின்றன. உங்களின் உச்சரிப்பு எப்போதும் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது" என கூறி உள்ளார்.

எந்த ஒரு சவாலோ அல்லது பின்னடைவோ வந்தால், அது உங்கள் பணியை இன்னும் தைரியத்துடன் செய்ய வேண்டும் என்று உங்கள் உறுதியை பலப்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தலைவராக வெங்கையா நாயுடு நேர்த்தியுடன் பணியாற்றியதையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார். இதையொட்டி அவர் "நீங்கள் தலைவராக பணியாற்றிய காலத்தில் மாநிலங்களவையின் செயல்பாடுகள் வரலாற்று அளவை கண்டதே உங்கள் வெற்றிகரமான அணுகுமுறைக்கு சான்று பகர்கிறது" என்று மெச்சி உள்ளார்.

மேலும் செய்திகள்