< Back
தேசிய செய்திகள்
இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி விடக்கூடாது போலீஸ் சூப்பிரண்டு  அறிவுரை
தேசிய செய்திகள்

இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி விடக்கூடாது போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

தினத்தந்தி
|
6 July 2023 12:15 AM IST

இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி விடக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் அறிவுரை வழங்கினார்.

சிக்கமகளூரு-

இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி விடக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் அறிவுரை வழங்கினார்.

மயானத்திற்கு செல்ல...

சிக்கமகளூரு அருகே மத்தவரா கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரு பிரிவினருக்கு மயானத்திற்கு செல்ல வழி விடாமல் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தகராறு செய்து வந்தனர். இதையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று அந்த கிராமத்தில் அமைதி கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

நல்ல குடிமகனாக...

மயானத்திற்கு வழிவிடும் பிரச்சினை தொடர்பாக எக்காரணம் கொண்டு இருபிரிவினரும் தகராறில் ஈடுபடக்கூடாது. அது பொதுவான நிலம். அதுபற்றி உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்படும். மயானத்திற்கு செல்லும் வழியை விட்டுக்கொடுப்பது நல்லது. இருபிரிவினரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சுமுகமாக செல்ல வேண்டும்.

இங்குள்ள இளைஞர்கள் மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றுக்கு அடிமை ஆகாமல் நல்ல குடிமகனாக வாழ்வில் உயர வேண்டும். நல்ல படிப்பு, பிடித்த வேலை, குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக் கொள்வது இப்படி நல்ல குடிமகனாக இருத்தல் வேண்டும்.

அடிமையாகி விடக்கூடாது

சிறு வயதிலேயே தீய பழக்கங்களுக்கு அடிமையாகி பலரும் தங்களது வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறார்கள். அதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் செல்போன் பயன்படுத்துவதிலும் அடிமையாகி விடக்கூடாது. அளவோடு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்