மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
|மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா ஸ்ரீராமபுராவில் ஒரு மைனர் பெண் வசித்து வருகிறாள். இந்த பெண்ணுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 22) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து வெங்கடேஷ், மைனர் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி கற்பழித்துள்ளார்.
இதையறிந்த மைனர் பெண்ணின் பெற்றோர் ஸ்ரீராமபுரா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
இந்த வழக்கின் விசாரணை சித்ரதுர்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி சாமுலா தீர்ப்பு கூறினார். அதில் மைனர் பெண்ணை கற்பழித்த வெங்கடேசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.