இளம்பெண் கூட்டு பலாத்காரம்; 5 பேர் கைது
|கோகாக் டவுனில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் பிடித்து விசாரித்தபோது குட்டு அம்பலமானது.
பெலகாவி:
கோகாக் டவுனில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் பிடித்து விசாரித்தபோது குட்டு அம்பலமானது.
கூட்டு பலாத்காரம்
பெலகாவி மாவட்டம் கோகாக் டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி தனது நண்பர் பசவராஜ் என்பவருடன் கோகாக் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இளம்பெண்ணின் மற்றொரு நண்பர் ஆதித்யா என்பவர் அங்கு வந்தார். அப்போது ஆதித்யா அவர்கள் 2 பேரையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது டீ வாங்கிவிட்டு வருவதாக ெசன்ற ஆதித்யா, தனது நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது அங்கு வைத்து ஆதித்யா, பசவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் ெகாலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண், இதுபற்றி யாரிடமும் கூறவில்லை.
5 பேர் கைது
இந்த நிலையில், கடந்த மாதம் 13-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக ஆதித்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், திருட்டு வழக்கில் கைதாகி உள்ளோம் என்பதை அறியாமல், பலாத்கார வழக்கில் தான் தங்களை போலீசார் கைது செய்தனர் என நினைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததை அவர்கள் போலீசாரிடம் உளறினர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், 5 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஆதித்யாவும், பசவராஜும் தங்கள் தோழியான இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்ததை சேர்ந்து ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனர். அதன்பிறகு வீடியோவை காண்பித்து இளம்பெண்ணிடம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்ததும் தெரியவந்தது.
பலாத்கார வழக்கு
இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அழைத்து புகாரை பெற்று கொண்டனர். இந்த வழக்கில் ஆதித்யா தவிர கைதானவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ரமேஷ், எல்லப்பா, கிருஷ்ணா உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய பசவராஜ் உள்பட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இளம்ெபண் கொடுத்த புகாரின்பேரில் கோகாக் போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.