< Back
தேசிய செய்திகள்
ஊழலைப் பற்றி பேசும்போது உங்கள் கூட்டணியில் உள்ள தி.மு.க.வை பாருங்கள் - ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி
தேசிய செய்திகள்

ஊழலைப் பற்றி பேசும்போது உங்கள் கூட்டணியில் உள்ள தி.மு.க.வை பாருங்கள் - ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி

தினத்தந்தி
|
9 Aug 2023 2:00 PM IST

ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார்

புதுடெல்லி,

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாததின்போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது கூறியதாவது:

"நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேசியவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளபோது நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுப்பது பெண் வெறுப்பு கொண்ட ஆண் மட்டுமே. இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை இதற்கு முன் இருந்ததில்லை. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் பார்த்தேன்..."

"காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் மிக மோசமான பேச்சுக்கு எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன்;

எதிர்க்கட்சிகள் இந்தியா கிடையாது, நீங்கள் ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள்"

"நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்று திரும்பத் திரும்ப கூறினார்கள். எதிர்க்கட்சிகள் அதிலிருந்து ஓடி ஒளிகின்றன. நாங்கள் அதை செய்யவில்லை..."

மணிப்பூர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அது பிரிக்கப்படவில்லை.

"ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை பாருங்கள்" என கூறினார்.

மேலும் செய்திகள்