< Back
தேசிய செய்திகள்
 குறி வைச்சா இரை விழணும்  யோகி ஆதித்யநாத் புகைப்படம் வைரல்
தேசிய செய்திகள்

" குறி வைச்சா இரை விழணும் " யோகி ஆதித்யநாத் புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
6 Jan 2024 5:30 AM IST

ராணுவ ஆயுத கண்காட்சி விழா மூன்று நாட்கள் நடக்கிறது.

லக்னோ,

உத்திரபிரதேசத்தில் ராணுவ தினத்தையொட்டி வைக்கப்பட உள்ள அதி நவீன ராணுவ தளவாடங்களை பார்வையிட்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நவீன கனரக துப்பாக்கியை குறி வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.நம் இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜன.15-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி ராணுவ தளவாடங்கள் கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ,

ராணுவ ஆயுத கண்காட்சி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அதி நவீன ஆயுதங்கள் எந்திர துப்பாக்கிகள் கண்காட்சி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மிகவும் கனரக அதிநவீன எந்திர துப்பாக்கியை குறித்து பரிசோதனை செய்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்