< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில், ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி யோகா பயிற்சி;  கலெக்டர் ரமேஷ் தகவல்
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில், ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி யோகா பயிற்சி; கலெக்டர் ரமேஷ் தகவல்

தினத்தந்தி
|
22 Jun 2022 8:50 PM IST

சிக்கமகளூருவில், ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி யோகா பயிற்சி நடக்க உள்ளதாகவும், இதில் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பதாகவும் கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

கலெக்டர் ரமேஷ் பேட்டி

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிக்கமகளூரு, சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி விளையாட்டுத்துறை மற்றும் ஆயுஷ்துறை சார்பில் யோகா பயிற்சி நடக்கிறது.

இதில் சுமார் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஒரேநேரத்தில் யோகாசனம் செய்ய உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும்.

இதற்காக அனைத்து பள்ளி-கல்லூரிகளிலும் வாரத்தில் சனிக்கிழமைதோறும் யோகா பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் யோகா பயிற்சி விழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழா நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

திட்டங்களை...

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த சமூக மக்கள் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். குறிப்பாக அரசு அதிகாரிகள், அந்த சமூக மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்