< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!
|22 Oct 2022 2:21 PM IST
கேரளாவில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கேரளா:
கேரளாவில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் அடுத்த சில நாள்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடற் பகுதியில் குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், அக்டோபர் 25-ஆம் தேதி வரை கேரளாவில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.