< Back
தேசிய செய்திகள்
நாயகன் மீண்டும் வரான் - இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் ஆர்எக்ஸ் 100 பைக்

Image Courtesy: BCMTouring

தேசிய செய்திகள்

'நாயகன் மீண்டும் வரான்' - இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் 'ஆர்எக்ஸ் 100' பைக்

தினத்தந்தி
|
20 July 2022 9:37 PM GMT

இந்திய சந்தையில் யமஹா ஆர்எக்ஸ் 100 ரக பைக்குகள் மீண்டும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் பிரபல பைக்குகளில் யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் ரகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 90'ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான பைக் ஆர்எக்ஸ் 100. குறிப்பாக தமிழ்நாட்டில் 90'ஸ் கிட்ஸ்களின் கனவு பைக்குகளில் ஆர்எக்ஸ் 100 தற்போதும் முதன்மையில் உள்ளது.

அதேவேளை, இந்தியாவில் ஆர்எக்ஸ் 100 ரக பைக் உற்பத்தி 1985 முதல் 1996 வரை நடைபெற்றது. 1996-க்கு பின் இந்தியாவில் ஆர்எக்ஸ் 100 ரக பைக் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த பைக் மீதான மோகம் தற்போதும் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.

அதன் காரணமாக ஆர்எக்ஸ் 100 பைக்குகளின் உதிரி பாகங்களை யமஹா நிறுவனம் தற்போதும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் ஆர்எக்ஸ் 100 ரக பைக் உற்பத்தியை தொடங்க திட்டம் உள்ளதாக யமஹா நிறுவனத்தின் இந்திய தலைவர் இஷினி ஷிஹானா தெரிவித்துள்ளார். 2026 அல்லது அதற்கு அடுத்து வரும் ஆண்டுகளுக்குள் ஆர்எக்ஸ் 100 பைக்குகள் உற்பத்தியை மீண்டும் தொடங்க திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிக மாசை ஏற்படுத்தும் 'டூ-ஸ்டோக்' ரக எஞ்சின் அல்லாமல் நவீன எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை புதிய ஆர்எக்ஸ் 100 ரக பைக்குகளில் ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஏதேனும் ஒரு பைக்கிற்க்கு ஆர்எக்ஸ் 100 என பலகையை ஒட்ட யமாஹா இந்தியா விரும்பவில்லை. ஏனென்றால் புதிய ஆர்எக்ஸ் 100 பழைய ஆர்எக்ஸ் 100 நற்பெயரை கொண்டு செல்ல வேண்டும். இது மிகப்பெரிய பணி. ஆனால், யமஹா இந்தியா அந்த பணியை மேற்கொள்ளும்' என்றார்.

இந்திய சந்தையில் யமஹா ஆர்எக்ஸ் 100 ரக பைக்குகள் மீண்டும் களமிறங்கும் என யமஹா இந்தியா தலைவர் தெரிவித்துள்ள நிகழ்வு ஆர்எக்ஸ் 100 பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்