< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
தேசிய செய்திகள்

கேரளாவில் 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

தினத்தந்தி
|
2 Oct 2022 9:34 AM IST

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.

புதுடெல்லி,

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.

இதைத்தொடர்ந்து 5 தலைவர்களுக்கும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இந்த 5 பேருக்கும் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த தலா 2 அல்லது 3 கமாண்டோக்கள் இந்த தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்