< Back
தேசிய செய்திகள்
சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய ரிட் மனு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய ரிட் மனு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
10 Oct 2022 9:28 PM IST

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஜம்புலிங்கம் என்பவர் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெய சுகின் ஆஜராகி, இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த ரிட் மனுவை இணைக்கவும், மத்திய அரசும், தமிழக அரசும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்