< Back
தேசிய செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!
தேசிய செய்திகள்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!

தினத்தந்தி
|
5 Jun 2023 9:24 AM IST

பஜ்ரங் புனியா, சாக்‌ஷி, மாலிக், வினேஷ், போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தெரிவித்தனர். மல்யுத்த வீராங்கணைகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வந்த வண்னம் உள்ளன.

இந்த நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் கூறி போராடி வரும் மல்யுத்த விரர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் நள்ளிரவில் சந்தித்து பேசியுள்ளனர். டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜ்ரங் புனியா, சாக்ஷி, மாலிக், வினேஷ், போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரியும் பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி காவல்துறை விரைவாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க அமித்ஷாவிடம் மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்