< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விவசாயிகள் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு
|1 Sept 2024 4:38 AM IST
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
சண்டிகர்,
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையேயான ஷம்பு எல்லையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ந் தேதி முதல் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நேற்று 200-வது நாளை எட்டியது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் பேசிய வினோஷ் போகத், விவசாயிகளின் கோரிக்கை சட்டவிரோதமானது இல்லை. அரசு அதை காதுகொடுத்து கேட்க வேண்டும்" என்றார்.