< Back
தேசிய செய்திகள்
முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்-மல்யுத்த வீரர் கைது
தேசிய செய்திகள்

முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்-மல்யுத்த வீரர் கைது

தினத்தந்தி
|
5 Dec 2022 3:48 PM IST

குஜராத்தில் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட மலயுத்த வீரர் பிடிபட்டார்.

ராஜ்கோட்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இளம் யோகா ஆசிரியை ஒருவர் மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரளித்தார். அதில் முகமூடி அணிந்த ஒருவர் தன்னிடம் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

முகமமூடி நபரை கண்டுபிடிக்க, போலீசார் நான்கு கண்காணிப்பு படைகளை அமைத்தனர். அருகில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அருகிலுள்ள வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்பு வீடுகள் மற்றும் பிற பொது இடங்ளளை ஆய்வு செய்தனர். இதில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

முமமூடி அணிந்த நபர் பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா (24) என தெரியவந்தது. மாநில அளவில் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவர் 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

நேற்று கவுஷல் பிபாலியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முகமூடியுடன் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு உள்ளார் என தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை பிபாலியா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது கீழ்த்தரமான செயலால் வக்கிரமான இன்பம் அடைந்து உள்ளார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தால் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்