< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு புகழாரம்
|7 Jun 2024 3:33 PM IST
உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
டெல்லி,
டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம்.
மோடி கூறியது போல், உலகளவில் 2047 ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி உள்ளார். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது" என்றார்.