< Back
தேசிய செய்திகள்
உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு:  பிரதமர் மோடி துபாய் புறப்பட்டார்..!
தேசிய செய்திகள்

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டார்..!

தினத்தந்தி
|
30 Nov 2023 2:50 PM GMT

இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

புதுடெல்லி,

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். மேலும் பிரதமர் மோடி 3 உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார். என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்