< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள்: சர்வதேச நிபுணர் பேட்டி
|26 Nov 2023 2:49 AM IST
உத்தரகாண்ட் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
டேராடூன்,
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மீட்புப்பணிகள் குறித்து சர்வதேச சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர் அர்னால்ட் கூறியதாவது:
" மலைப்பகுதியில் நடைபெறும் மீட்புப்பணி என்பதால், இது மிகவும் சிக்கலானதாக உள்ளது. மீட்புப்பணிகள் எப்போது நிறைவடையும் என உறுதிபட சொல்ல முடியாது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 பேரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடுதிரும்புவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக உள்ளனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.