< Back
தேசிய செய்திகள்
அசுத்த நீரை குடித்த தொழிலாளி சாவு
தேசிய செய்திகள்

அசுத்த நீரை குடித்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
7 Nov 2022 4:41 AM IST

பெலகாவியில் அசுத்த நீரை குடித்த தொழிலாளி உயிரிழந்தார்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா முடேனூர் கிராமத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த அசுத்த நீரை குடித்த 186 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 94 பேரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக டாக்டர் கூறினார். அசுத்த நீரை குடித்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் ஏற்கனவே உயிரிந்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி விட்டலா (வயது 45) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அசுத்த நீரை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்