உரிமையாளர் வீட்டில் திருடிய தொழிலாளி கைது
|குடகில் உரிமையாளர் வீட்டில் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குடகு;
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா பிருனாணிபொரடு கிராமத்தில் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு லோகேஷ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் (மே) 29-ந் தேதி லோகேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த 14 கிராம் தங்க நகை, ரூ.48 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
இது குறித்து லோகேஷ் ஸ்ரீமங்களா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லோகேஷின் வீட்டில் வேலை பார்த்து வந்த கேரளா மாநிலம் காசர்கோடை சேர்ந்த சதீ்ஸ் என்ற வாலிபர் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க முயற்சித்தனர். அப்போது அவர் மாயமாகியிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில் அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சதீசை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.