< Back
தேசிய செய்திகள்
மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி: துணை சபாநாயகர் பதவியை ஏற்க மாட்டேன் - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேட்டிகோப்புப்படம்
தேசிய செய்திகள்

மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி: துணை சபாநாயகர் பதவியை ஏற்க மாட்டேன் - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேட்டி

தினத்தந்தி
|
29 May 2023 5:46 AM IST

கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. புட்டரங்கஷெட்டி மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. புட்டரங்கஷெட்டி. அவர் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருந்தார். ஆனால் பதவி கிடைக்காததால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். அவருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதை புட்டரங்கஷெட்டி நிராகரித்து உள்ளார். இதுகுறித்து அவர் சாம்ராஜ்நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருந்தேன். அது கிடைக்கவில்லை. துணை சபாநாயகர் பதவி வழங்குவதாக சித்தராமையா கூறியுள்ளார். துணை சபாநாயகர் பதவியை ஏற்க வேண்டாம் என்று எனது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த பதவியை நான் ஏற்க மாட்டேன். அந்த பதவியை ஏற்றால் மக்கள் என்னை சந்திக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் அவர்கள் நான் இந்த பதவியை ஏற்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். மந்திரி பதவி இல்லாமல் எனது தொகுதியில் பணியாற்றுவது கடினம். மக்களுடனான எனக்கு இருக்கும் தொடர்பு துண்டித்து போகும்.

நான் டெல்லியில் இருந்தபோது, எனக்கு மந்திரி பதவி வழங்குவதாக தலைவர்கள் உறுதியளித்தனர். நான் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து சேர்ந்த போது, எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று தகவல் வந்தது. எனது பெயர் கைவிடப்பட்டதற்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து சித்தராமையா தான் விளக்க வேண்டும்.

இவ்வாறு புட்டரங்கஷெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்