< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: தடகள வீராங்கனை 22 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்
|3 Aug 2023 11:01 PM IST
ஆஷா மால்வியா 28 மாநிலங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இதுவரை 22 ஆயிரம் கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளார்.
ஸ்ரீநகர்,
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனையும், தடகள வீராங்கனையுமான ஆஷா மால்வியா, பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி போபாலில் தனது பயணத்தை தொடங்கிய ஆஷா மால்வியா, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இதுவரை 22 ஆயிரம் கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளார்.
தற்போது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை அடைந்துள்ள ஆஷா மால்வியா, வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்திற்குள் 25 ஆயிரம் கி.மீ. தூரம் என்ற இலக்கை நிறைவு செய்ய திட்டமிட்டு தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.