பெண்களின் நிர்வாண வீடியோ எடுத்து விபசாரத்திற்கான விலை நிர்ணயம் செய்த விபசார கும்பல்
|பெண்களின் நிர்வாண வீடியோக்களை எடுத்து அவர்களுக்கு விபசாரத்திற்கான விலை நிர்ணயம் செய்த விபசார கும்பலின் மோசடியை ஐதராபாத் போலீசார் முறியடித்து உள்ளனர்.
ஐதராபாத்
ஒரு பெண் சமூக ஆர்வலரின் உதவியுடன் மிகப்பெரும் விபசார மோசடியை ஐதராபாத் போலீசார் முறியடித்து உள்ளனர்.
இந்த் மோசடியில் ஈடுபட்ட சையத் உசேன் (35) குலாம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து ஐதராபாத் போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
உசேன் பசவகல்யாண் மாவட்டத்தில் உள்ள ராஜேஸ்வர் கிராமத்தில் லாரி டிரைவராக இருந்து வந்தார். குலாம் கலபுர்கி பகுதியில் விபச்சார விடுதிகளை ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
உசேன் பர்காஸில் உள்ள சலால் பகுதியில் வேலை தேடி வருவதாக கூறி அங்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். பலக்னுமாவில் உள்ள வட்டேப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து, விபசாரத்திற்கு ஏற்ற பெண்களைத் வேட்டையாட தொடங்கினர்.
பணப்பிரச்சனையில் இருக்கும் பெண்களுக்கு பண்ம கொடுப்பதாக கூறி வலைவீசி உள்ளனர். பணம் தருவதாக கூறி தனது அறைக்கு அழைத்து வந்து, முகம் மற்றும் கால்கள் இல்லாத அவர்களின் நிர்வாண வீடியோக்களை தனது மொபைல் போனில் படம்பிடித்தார்.
அந்த வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் தனது முதலாளி குலாமுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் அவர் வீடியோவைப் பார்த்த பிறகு அந்த பெண்ணிற்கு எவ்வளவு ரேட் என முடிவு செய்து உள்ளார். இது போல் கடந்த ஒரு வாரத்திற்குள் 10 பெண்களின் விவரங்கள் அனுப்பி உள்ளார்.
உசேன் செய்த அட்டூழியத்தை அறிந்த ஒரு பெண் சமூக ஆர்வலர் மற்றொரு பெண்ணுடன் அவரது அறைக்கு சென்று உள்ளார். உசேன் அந்த பெண் மிகவும் குட்டையாக இருக்கிறார் என்று கூறி சமூக ஆர்வலரை நிராகரித்து உள்ளார். மற்ற பெண்களை அடுத்த நாள் நல்ல மேக்கப்புடன் வருமாறு கேட்டுக்கொண்டார், அப்போது தான் அவர்களுக்கு எவ்வளவு ரேட் என தீர்மானிக்க முடியும் என கூறி உள்ளார்.
பெண் சமூக ஆர்வலர் சந்திரயாங்குட்டா இன்ஸ்பெக்டர் பிரசாத் வர்மா உதவியுடன் மறுநாள் சென்று உசேனை கைது செய்தனர். அவரது செல்போனில் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் 470 ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.