< Back
தேசிய செய்திகள்

கோப்புப்படம்
தேசிய செய்திகள்
கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள்.! அக்னிபத் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்

5 July 2022 10:09 PM IST
அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர, சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர, சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்திய கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள் சேர்க்கப்பட உள்ளனர்.
இவர்கள் போர்க் கப்பல்களில் பணியாற்ற உள்ளனர். 2022ல் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 3 ஆயிரம் அக்னி வீரர்கள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ள நிலையில், இவர்களில் பெண்கள் எத்தனை பேர் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.