< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் - மத்திய மந்திரி தகவல்
|27 Oct 2023 2:24 AM IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, டெல்லியில் நடந்த இந்திய பொது விவகார மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா காரணமாக, 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு திறமையானவர்களாக மாறுவார்கள். இதுதான் பெண்களின் வலிமை.
இவ்வாறு அவர் பேசினார்.