< Back
தேசிய செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் பெண்கள்
தேசிய செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் பெண்கள்

தினத்தந்தி
|
8 March 2023 4:59 PM IST

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போபால்,

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் பாதுகாப்பு பணிகளை பெண் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அந்த வகையில் முதல்-மந்திரியின் தனி பணியாளர், ஓட்டுநர், புகைப்படக் கலைஞர், பாதுகாப்பு அதிகாரி என அனைத்து பணிகளையும் ஒரு நாள் முழுவதும் பெண்களே மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து பேசிய சிவராஜ் சிங் சவுகான், பெண்கள் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும், பாதுகாப்பு பணிகளை அவர்களால் திறம்பட மேற்கொள்ள முடியும் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்