< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் உடல் - போலீசார் விசாரணை
|24 Jun 2023 3:47 AM IST
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மிதந்தது.
ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதந்ததாக போலீசார் தெரிவித்தனர். தோல்பூர்-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் உள்ள குளத்தில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பசாய் டாங் காவல் நிலைய பொறுப்பாளர் மோகன் சிங் தெரிவித்தார்.
முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை குளத்தில் வீசியதாக தெரிகிறது. அந்த பெண்ணின் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.