< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கலபுரகியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு
|11 Oct 2022 2:07 AM IST
கலபுரகியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்தார்.
கலபுரகி:
கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகா சிம்மனசோடா கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா. விவசாயி. இவரது மனைவி சுனிதா (வயது 28). இந்த நிலையில் சுனிதா, அரசு ஆஸ்பத்திரியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இருந்தார். 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வந்த அவர், திடீரென்று உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் சின்சோலி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்தடை சிகிச்சை பெற்ற நிலையல் சுனிதா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சின்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.