< Back
தேசிய செய்திகள்
கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் நடத்திய பெண்
தேசிய செய்திகள்

கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் நடத்திய பெண்

தினத்தந்தி
|
24 Jun 2022 9:38 PM GMT

பாகல்கோட்டையில் கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு பெண் ஒருவர் சீமந்தம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை மாவட்டம் குலிதகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு சிக்கவ்வா எனவும் பெயர் சூட்டி சீராட்டி வளர்த்து வந்தார். இந்த நிலையில், அந்த வளர்ப்பு நாய் கர்ப்பமானது. இதையடுத்து வளர்ப்பு நாய்க்கு அவர் சீமந்தம் நடத்த முடிவு செய்தார். அதன்படி சமீபத்தில் ஜாலதி, தனது வளர்ப்பு நாய்க்கு குடும்பத்தினர், உறவினர்களை அழைத்து சீமந்தம் நடத்தினார்.

இதையொட்டி வளர்ப்பு நாயை குளிப்பாட்டி நெற்றியில் குங்குமம், சந்தனமிட்டார். பின்னர் பச்சை நிற வளையல்கள், பச்சை நிற சேலை அணிவித்து, ஆரத்தி எடுத்து நாய்க்கு சீமந்த விழா நடந்தது. அத்துடன் வளர்ப்பு நாய்க்கு பிடித்த உணவுகள், பழங்கள் வழங்கப்பட்டது. தற்போது சிக்கவ்வா நாய்க்கு சீமந்த விழா நடத்திய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வளர்ப்பு நாய் ஏற்கன 6 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் தலா 3 ஆண், பெண் குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்