முன்னாள் காதலனின் மனைவி மீது ஆசிட் வீசிய பெண் - மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
|மத்திய பிரதேசத்தில் முன்னாள் காதலனின் மனைவி மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர்,
மத்திய பிரதேசத்தில் முன்னாள் காதலனின் மனைவி மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் லிவ்-இன் காதலனின் மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார். ஜனக்கஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பெண் கூறும்போது போது, 2018 முதல் லிவ்-இன் உறவில் இருந்த போது அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இந்த நிலையில் ஆசிட் சம்பவம் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.