நடுதெருவில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்
|பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி சக பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் பச்சோரா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே சமீபகாலமாக மோதல்போக்கு நிலவி வந்துள்ளது. இவரும் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, அதேகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணும் லட்சுமியின் மாமியாரும் நட்புரீதியில் பழகி வந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணின் தூண்டுதலின் பெயரிலேயே தனது மாமியார் தன்னுடன் சண்டையிட்டு வருவதாக லட்சுமி நினைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் 30 வயதான அப்பெண்ணும், லட்சுமியின் மாமியாரும் ஹோலி பண்டிகையன்று தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள மண்சுரா பகுதிக்கு சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், 30 வயதான அப்பெண்ணின் தூண்டுதலின்பெயரிலேயே மாமியார் தன்னிடம் சண்டையிடுவதாகவும், தன்னிடம் தெரிவிக்காமல் தன் மாமியாரை அப்பெண் வெளியூருக்கு அழைத்து சென்றுவிட்டதாலும் லட்சுமி ஆத்திரமடைந்துள்ளார்.
பின்னர், தன் உறவினர்களான 3 பெண்களுடன் லட்சுமி அந்த பெண்ணின் வீட்டிற்கு ஹோலி தினத்தன்று மாலை சென்றுள்ளார். அங்கு பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரை லட்சுமி தனது உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். வீட்டில் இருந்து அப்பெண்ணை வெளியே தரதரவென இழுத்து சென்று நடுதெருவில் வைத்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர், அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கினர். நடுதெருவில் நடந்த இக்கொடூர சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை தாக்கிய லட்சுமி உள்பட 4 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.