< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் தாயார் சுட்டுக்கொலை - காதலன் வெறிச்செயல்
|28 April 2024 2:41 AM IST
தலைமறைவான காதலன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீடி தேடி வருகிறார்கள்
புதுடெல்லி,
டெல்லி ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த வாலிபரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியை ஒரு விடுதியில் தங்கவைத்து படிக்க வைத்தனர். இதனால் மாணவியை காணாமல் வாலிபர் தவித்துள்ளார்.
இந்தநிலையில் அந்த வாலிபர், காதலியின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு தன் நண்பர்கள் 2 பேருடன் சென்றார். அங்கு காதலியின் தாயார் சரிதா சர்மா இருந்தார். காதலியை குறித்து விசாரித்தபோது அவர் பிடிகொடுக்காமல் பேசி வாலிபர்களை வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதனால் சரிதாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு வாலிபர்கள் தப்பியோடினர். இதில் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரிதா உயிரிழந்தார். தலைமறைவான காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.